புகைப்படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா விமானப்படை தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கொண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த படை பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்