பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது

மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க