பிளாட்டினம் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் புதன் கிழமை இரவு விமான நிலைய போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

புத்தளம், வேப்பமடுவில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இரண்டு வருட காலப் பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பிய நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 29.7 மில்லியன் பெறுமதியான 19,800 வெளிநாட்டு பிளாட்டினம் சிகரெட்டுகள் அடங்கிய 99 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் பொலிஸ் பிணையில், விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த சிகரெட்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 15ஆம் திகதியன்று முன்னிலைப்படுத்தவுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்