பிரித்தானிய பொதுத் தேர்தல் : எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி

பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதாக  பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 650 தொகுதிகளிலுள்ள 40,000க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன.

இன்னும் 93 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகவேண்டியுள்ள போதும், ஆட்சியமைக்க அவசியமான 326 ஆசனங்களைத் தொழிலாளர் கட்சி கடந்துள்ளது.

இதன்படி, கெர் ஸ்டாமர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாகப் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்