பிரதேச கலை இலக்கிய விழா

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மூதூர் பிரதேச கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்திய பிரதேச கலை இலக்கிய விழா மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று புதன் கிழமை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச கலை இலக்கிய விழாவில் நான்கு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள், கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களினால் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திருவாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச செயலாளர், சேருவில பிரதேச உதவி பிரதேச செயலாளர், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சபை செயலாளர், சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கலாசார அதிகார சபையினர், மூத்த கலைஞர்கள், ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடசாலை மற்றும் திறந்த மட்டப் போட்டிகளில் கலந்து முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றியீட்டியவர்களுக்கும், நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அதிதிகள் மற்றும், பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்