இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்
பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் தமது 80 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.
உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000 பாடல்களை இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்