பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது மற்றும் 01 கிலோ பொதி 75 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.