பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வி அவசியம்: வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ
அன்பு மற்றும் பாலியல் தொடர்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்வதில் பாடசாலை மாணவர்கள் காட்டும் அசமந்த போக்கே சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பிற்கான பிரதான காரணமாகும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளை இல்லாதொழிப்பதற்கு பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வியை மேம்படுத்துவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்பு மற்றும் பாலியல் ரீதியான உறவு என்பவற்றின் வேறுபாடுகளை அறியாத பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். சமூகத்தில் பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என வெளிப்படையாக அறிந்தாலும் அதற்குச் சமனாக ஆண் பிள்ளைகளும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்