பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு: விசேட அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரியர், அதிபர்கள் நாளைய தினமும் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று குறித்த போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்