பாகிஸ்தான் தேர்தலில் வென்றது யார்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி,  தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) வெளியிட்டுள்ள குறிப்பில் ஆட்சியில் உள்ள நவாஸ் ஷெரீபின் முஸ்லீம் லீக் கட்சி தனது தோல்வியை ஒப்புகொள்ளுமாறு கேட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி (பிஎம்எல்-என்), முன்கூட்டிய மற்றும் பாரபட்சமான ஊகங்கள் இது,  பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆதரமாக பிடிஐ, தனது வேட்பாளர்கள் 150-க்கும் அதிகமான இடங்களில் பெரும்பான்மை பெற்றதற்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 45 தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மோசடி செய்து பிடிஐ வேட்பாளர்களிடம் மிரட்டி பொய்யான படிவங்களில் கையெழுத்து பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது பிடிஐ.