
பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம்.
ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு பொருளாதாரத்தின் பிரதிபலிப்பாகும். உலகம் முழுவதும் பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக டாலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பும் அமெரிக்க டாலர்கள் (USD) அடிப்படையில் அளவிடப்படுகிறது.
இன்று ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.76 ஆக உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 281.16 பாகிஸ்தான் ரூபாய். கடந்த சில ஆண்டுகளாக டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
சர்வதேச நாணயத்தின்படி, பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு 3.28 ரூபாயாக உள்ளது. அதாவது ஒரு இந்திய ரூபாயை பாகிஸ்தான் ரூபாயாக மாற்றினால் அது 3.28 ரூபாயாக இருக்கும்.
ஒருவர் 1 லட்சம் இந்திய ரூபாயுடன் (₹) பாகிஸ்தானுக்குச் சென்றால், அதன் மதிப்பு 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாயாக இருக்கும். ஒரு பாகிஸ்தானியர் தனது நாட்டில் இருந்து 1 லட்சம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்தால், அந்த பணத்தின் மதிப்பு இந்தியாவில் 30,428.27 ரூபாய் (₹) மட்டுமே இருக்கும்.
பாகிஸ்தானின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாகிஸ்தானில் பொது மக்களின் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் பொருளாதார நிலை கடந்த சில ஆண்டுகளாக மோசமாக உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் இந்தியா மீது தாக்குதல் நடத்தி போருக்கு வித்திட்டுள்ளது பாகிஸ்தான். இதனால், போர் நடக்குமா அது பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகமாக்குமா என்பதை போக போக தெரியவரும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்