
பாகிஸ்தானின் 9 இடங்கள் இலக்கு நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய இலக்குகளில் சிந்தூரில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. அதன்படி இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 9 இலக்குகளும் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்