பல்பொருள் அங்காடியில் தாக்குதல் : மூவர் பலி!
சீனாவின் ஷாங்காயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.
அங்காடிக்குள் பிரவேசித்த நபரொருவர் ஆயுதம் ஒன்றினால் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்