பலசரக்கு ஏற்றுமதியில் 15 கோடி இலாபம்

தேசிய பலசரக்கு ஏற்றுமதி ஊடாக கடந்த வருடத்தில் 15 கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கராம்பு, மிளகு, சாதிக்காய், கறுவா, ஏலம் உள்ளிட்ட 63,232 மெற்றிக் டன் அளவிலான பலசரக்கு பொருட்கள் கடந்த வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் வருடம் பலசரக்கு பொருள் ஏற்றுமதியின் ஊடாக 14 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்