பரீட்சை மண்டபங்களுக்கு அடைமழைக்கு மத்தியில் செல்லும் மாணவர்கள்

-அம்பாறை நிருபர்-

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் டிசம்பர் 20ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்ட மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.

அதன்படி கல்முனை, சம்மாந்துறை, கல்வி வலய மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டதக்கது.