பங்களாதேஷில் வெடித்த பாரிய கலவரம் : காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமுல்!

பங்களாதேஷில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 91 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, ஏபிசி செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

பங்களாதேஷில் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பித்த நிலையில் 13 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெருக்களில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர்.

தலைநகர் டாக்கா மற்றும் வடக்கு மாவட்டங்களான போகுரா, பாப்னா மற்றும் ரங்பூரிலும், மேற்கில் மகுராவிலும், கிழக்கில் கொமிலாவிலும், தெற்கில் பாரிசல் மற்றும் ஃபெனியிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்