நீதிமன்றத்திற்கு முன்பாக தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு முன்பாக நபர் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் ட்ரம்ப் இன்று நீதிமன்றில் முன்னிலையான போதே குறித்த நபர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்னர் குறித்த நபர் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் சுற்றித் திரிந்ததாக அமெரிக்காவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அமெரிக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காணொளி மூலம் : AP News