நீதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள்
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியின் படத்தை உள்ளடக்கி அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாகோட்டை, தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 27, 41 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், சுவரொட்டிகளைத் தயாரித்து, அவற்றை அச்சிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்