நிந்தவூரில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
-சம்மாந்துறை நிருபர்-
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லிமூலை மல்கமபிட்டி வீதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இச் சம்பவம் இன்று செவ்வாயக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது
இதன் போது, நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி (மண் வியாபாரி) என்பவரே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அல்லி மூலை மல்கம்பிட்டி பாதையால் பயணிக்கும் போது யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்