நாட்டின் சில இடங்களில் மீண்டும் மின்தடை!

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததால், பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாததால், சில பகுதிகளுக்கு மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும், என்று மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்

நாடு தழுவிய மின்தடை சரிசெய்யப்பட்ட பின்னர், மீண்டும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க