நவமங்கை நிவாச இயக்குனருக்கு சர்வதேச சாதனையாளர் விருது
-யாழ் நிருபர்-
நவமங்கை நிவாச இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் மற்றும் சமூக சேவையாளரும் வைத்தியருமான கணேசவேல் ஆகியோருக்கு சர்வதேச சிறந்த சாதனையாளர் விருது நேற்றையதினம் ஞாயிற்று கிழமை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான UNIPON (ஐக்கிய இயற்கை சர்வதேச அமைப்பு) அதன் தேசிய 4ஆவது மாநாடு யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடத்திய நிலையில் குறித்த விருது வழங்கப்பட்டது.
அதில் 26 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், குறித்த விருதுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்குமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வழங்கி கௌரவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்