தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இதுவரை செலவின அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு தயாராகி வருகிறது.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்றது.
இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1249 வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என எஃப்.ஏ.எஃப்.ஈ.ஆர்.ஏ.எல்(FAFERAL) இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸாருடன் ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்