தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: ஹிஸ்புல்லாஹ்

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

பொருட்களின் விலைகளைக் குறைப்போம். மின்சார கட்டணங்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளைக் குறைப்போம் என பல்வேறு விடயங்களைக் கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தும் பொருட்களின் விலைகளைக் குறைத்ததாக அறியவில்லை.

மாறாக அரிசி, தேங்காய் மற்றும் சில பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. விலைகளைக் குறைக்க முடியாத நிலையில் அரசு திண்டாடுகின்றது.

அரசாங்கம் பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டினுடைய பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தாமல் தாம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்