தேர்தல் கடமை மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவகருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் இடம்பெற்ற மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகத் தெளிவூட்டப்பட்டது.