தேன் மருத்துவம்

தேன் மருத்துவம்

தேன் மருத்துவம்

💢நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.

💢மொந்தன் தேன், மலைத்தேன், குறிஞ்சி தேன், கொசுவந்தேன், திப்பிலித்தேன் என, தேனில் பலவகை உண்டு. இதில் குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன. பொதுவாக தேன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாக இருக்கும். அந்தவகையில் தேனின் மருத்துவ குணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

🍯இரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது. இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொலஸ்டிரால் குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது.

🍯தேனுடன் வெங்காய சாறை கலந்து சாப்பிட்டு வர இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது,இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது

🍯சிறிது நேரம் தேனை வாயில் வைத்திருந்து பின் கொப்பளித்தால், வாய்ப்புண், வறட்சி, வெடிப்பு போன்ற தொல்லைகள் நீங்கும்.

🍯இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.

🍯ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

🍯அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

🍯 மாதுளம்பழ ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும்.

🍯கண்பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

🍯இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

🍯என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

🍯தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

🍯குழந்தைகள், தூங்க போவதற்கு முன், நாள்தோறும், ஒரு ஸ்பூன் தேனை அருந்த கொடுத்து வந்தால், படுக்கையில் சிறுநீர் போகும் பழக்கம் நின்றுவிடும்.

🍯உணவு சாப்பிடும் போது, இரண்டு ஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் ஒற்றைத் தலைவலி அடியோடு நின்றுவிடும்.

🍯அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

🍯மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன் தான். வலி உள்ள இடத்தில் நன்றாக தேனை தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்கும்.

தேன் மருத்துவம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்