தேசிய மட்ட பரதநாட்டியம் போட்டியில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் சாதனை

-கல்முனை நிருபர்-

அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை பரதநாட்டியம் தேசியமட்டப்போட்டியில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து கலந்து கொண்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் மாணவிகள் பரதநாட்டியம் சிரேஸ்ட பிரிவு -1 இல் சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற புத்தாக்க நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று, வலயத்திற்கும், பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.

பாடல் வரிகளை ஆசிரியர் சிங்காரவேல் எழுதியிந்ததுடன் நடன ஆசிரியை திருமதி பிரஷன்யா சுரேஸ் நெறிப்படுத்தல் மற்றும் சங்கீத ஆசிரியை திருமதி ஜோதி ஜெயராஜ் பங்கேற்புடன் மாணவிகளான அனுர்திகா, சேஷானிகா, அஸ்மிதாஇகிருஷ்டிகா, சப்தனாரக்ஸி, கிருஷ்ணிகா, அக்சனா, டுக்சாயினி ஆகியோரின் ஆற்றுகையில் நடைபெற்ற நடனப் போட்டியிலே இம் மாணவிகள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேசிய மட்டத்தில் இச் சாதனையை புரிவதற்கு உறுதுணையாக இருந்து மாணவிகளை வழிப்படுத்திய நடன ஆசிரியை மற்றும் சங்கீத ஆசிரியை உட்பட ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை சமுகத்தினர், மாணவர்கள் ஆகியோருக்கு அதிபர் சி.சசிதரன் தமது நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.