தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மேற்கத்திய, மத்திய கிழக்கு மற்றும் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களின் நிதி அனுசரணையோடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸ் ஒழுங்கமைப்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும், மகிழூர் மேற்கு இளைஞர் கழகம், மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகம், மகிழூர் கிழக்கு இளந்தென்றல் இளைஞர் கழகம், கண்ணகிபுரம் இமையம் இளைஞர் கழகங்களின் பூரண ஒத்துழைப்புடனும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தலைமைத்துவ பயிற்சி இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ரம்சி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன், மற்றும் கோறளைப்பற்று பிரதேச முன்னாள் இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் அ.வினோத் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தி இருந்தனர்.
நிகழ்வின் அதிதிகளாக ஆரம்ப நிகழ்வுக்கு பாடசாலையின் அதிபர் அ.மனோகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.சதீஸ்வரி கிருபாகரன், பிரதேச சம்மேளன தலைவர் செல்வன் ஞா.சஞ்ஜீவன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன்.கு.துசாந்தன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பி.ப.4 மணிக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர் அ.மனோகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், கிராம சேவை உத்தியோகத்தர் ச.தேவதாஸ், இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் அ.வினோத், சம்மேளன தலைவர் செல்வன் ஞா.சஞ்ஜீவன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் கு.துசாந்தன், மகிழூர் மேற்கு இளைஞர் கழக தலைவர் த.லக்சான், மகிழூர்முனை சக்தி இளைஞர் கழக தலைவர் அ.அனுஜன் மகிழூர் கிழக்கு இளைஞர் கழக உப தலைவர் க.சஞ்ஜீவ் கண்ணகிபுரம் இமையம் இளைஞர் கழக பொருளாளர் நிசாந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் தலைமைத்துவம் என்றால் என்ன, தலைமைத்துவம் ஏன் அவசியம், தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய பண்புகள் குழு செயற்பாடு தொடர்பாகவும் முதலாவது விரிவுரை நடைபெற்றது .
இதேவேளை 2ஆவது விரிவுரையில் அவதானம் , அவதானம் இல்லாமையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விரிவுரை நடைபெற்றிருந்தது.
மேலும் 3ஆவது விரிவுரையில் சமூகம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அடையாளம் தொடர்பாகவும், ஒரு பிரச்சினையை கையாளுதல் மற்றும் இலக்கை எவ்வாறு அடைதல் என்பது தொடர்பாகவும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்றால் என்ன அது எவ்வாறான சேவைகளை செய்கிறது அதனால் அடைந்த நன்மைகள் தொடர்பான தாகவும் விரிவுரைகள் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகள் உரை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்