
தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்பகுதியில், நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் காயமடைந்தவர், சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவ்வாறு தாக்குதலை நடாத்திய இருவரில் ஒருவரை, துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்