தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: சாரதி பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பேருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பேருந்தின் சாரதி உயிர் இழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களில் நால்வர் தங்காலை ஆதார வைத்தியசாலையிலும் 9 பேர் பெலியத்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஒரு சுற்றுலா வழிகாட்டியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சாரதியின் சடலம் பெலியத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM