தீப்பற்றிய நிலையில் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த பெண்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை எரிந்த நிலையில் பெண்ணொருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணியைச் சேர்ந்த பவானி (வயது 43) என்ற  பெண்ணே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்திருந்த குறித்த பெண், நேற்றிரவு தீப்பற்றிய நிலையில் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்