திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கிராம சேவகர் பிரியா விடை நிகழ்வு

-திருகோவில் நிருபர்-

திருகோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 1கிராமசேவகர் பிரிவில் கிராம சேவகராக கடமையாற்றிய சஞ்ஜீவநாத் திருக்கோவில் 2கிராம சேவகர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

திருக்கோவில் 1 கிராம சேவர் பிரிவில் அவர் ஆற்றிய சேவைகளை கருத்தில் கொண்டு கிராம நலன் விரும்பிகள் மற்றும் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் அவருக்கான கௌரவம் மற்றும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக கிராமசேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோத்தர் கந்தசாமி மற்றும் திருக்கோவில் முதலாம் பிரிவு மற்றும் இரண்டாம் பிரவுகளின் கிராமசேவகர்கள் அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி உத்தியோத்தர்கள் கிராம நலன் விரும்பிகள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்