முதலைக் கடிக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுவான் குளத்தில் இன்று புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் குளிப்பதற்காக இறங்கிய இளம் குடும்பஷ்தர் ஒருவரை முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

தோப்பூர் -பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி நிதுர்சன் (வயது – 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணவனும், மனைவியும் வயலை பார்த்துவிட்டு வரும் வழியில் கணவன் குளிப்பதற்காக குளத்தில் இறங்கியபோதே முதலை அவரை திடிரென பாய்ந்நு இழுத்துத் சென்றுள்ளது.

குளத்தின் கரையிலிருந்த மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை.இதன்பின்னர் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணிநேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்டபோது சடலமானது மாலை 5.30 மணியளவிலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.