திருகோணமலையில் நான்கு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

-கிண்ணியா நிருபர்-

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று செவ்வாய் கிழமை வழங்கி வைக்கப்பட்டது

வருவாய் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலையில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது நான்கு குடும்பங்களுக்கு நீர் இறைக்கும் எந்திரம் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகளை வழங்கியது.

இதனை நலன்புரி சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறமை குறிப்பிட தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்