திருகோணமலையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை இன்று புதன் கிழமை திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

“76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல்” என்ற தொனிப்பொருளில் இவ்வேலைத்திட்டமானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் பி.ஆர்.சுமித்கொட்டின்கடுவ, தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரனி, இளைஞர் சேவை உத்தியோகத்தர் எ.என்.பிரபாத் தில்ருபன் பண்டார, ஏனைய பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் 250 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்