தவறான முடிவு எடுத்த இராணுவ வீரர்: விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

கம்பளை – பல்லேதெல்தொட்ட பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சென்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை குளவி கொட்டியுள்ளது.

இவர்கள் சிகிச்சைக்காக கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லே தெல்தோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இராணுவத்தில் பணிபுரியும் 43 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த சென்ற பொலிசார் மீதே குளவிகள் கொட்டியுள்ளன.

குளவி தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகளில் பெண் பொலிஸாரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்