தயிர் நன்மைகள்

தயிர் நன்மைகள்

தயிர் நன்மைகள்

💦நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் படி, தயிர் பெரும்பாலும் மதிய உணவு வேளையில் உண்பது வழக்கம். கால்சியம், வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B12, பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிர் என்பது குளிர்ச்சியான பானமாகும். உடல் சூட்டை தனித்து நமக்கு ஆரோக்கியம் தருகிறது.

💦இன்று தயிர் உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவாகும். இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தைப் பேணும் நலன்கள் கொண்ட உணவாகவும் காணப்படுகின்றது. புரதங்கள், கால்சியம், ரிபோஃபிளாவின், வைட்டமின்பி 6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.

தயிர் நன்மைகள்

🥛தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இது செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

🥛பெண்கள் தினசரி கெட்டித் தயிர் சாப்பிட்டு வர அவர்களுக்கான மார்பகப் பிரச்னையை தவிர்க்க முடியும்.

🥛தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது.

🥛மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

🥛வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்பளங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிடுவதால் சரியாகிவிடுகிறது.

🥛 மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் தயிர் சாப்பிடலாம். தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

🥛தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தயிர் எளிதாக ஜீரணமாகக்கூடியது. மேலும் நொதித்தல் செயல்பாட்டின்போது லாக்டோஸ் உடைக்கப்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு தயிர் சிறப்பு வாய்ந்தது.

🥛தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.மேலும், தயிரின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக குறைவாகும். ஆகையால் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

🥛சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம்.

🥛தயிர் சாப்பிடுவதால் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

🥛அல்சர் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அடைவதற்கு தயிர் சாப்பிட்டால் சரியாகிவிடும்.

🥛உப்பு மாற்று சர்க்கரையுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும்.

🥛வயிற்று வலி பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

🥛அதிகமான வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தயிரில் வெந்தயத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடனடியாக குணமாகிவிடும்.

🥛தயிரை முகத்தில் பூசினால் கூடுதல் நன்மைகள் ஏற்படுவதோடு முகத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

தயிர் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்