ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு!
ஜா-எல-வெலிகம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி, சுமார் 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், குறித்த வீட்டை அண்மித்த இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்