செல்லும் இடமெல்லாம் தமிழ் தேசியத்துக்காக வாக்களிக்க மக்கள் தயார்

-மூதூர் நிருபர்-

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் மூதூர் பிரதேச சபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் அகிலேசப்பிள்ளை உதயகுமாரின் மக்கள் சந்திப்பு இன்று திங்கட்கிழமை மூதூர் – மணற்சேனையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே கல்விப் புலத்தில் இருந்து பல்வேறு சேவைகளை செய்த நான் அரசியலில் களம் இறங்கியுள்ளேன்.

நான் தற்போது பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றேன்.செல்லும் இடமெல்லாம் தமிழ் தேசியத்துக்காக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதை காணமுடிகிறது.மக்கள் திறமையானவர்களை இணங்கண்டு வாக்களிக்க வேண்டும்.

பல்வேறு கிராமங்களுக்குச் சென்றேன்.வீதிகளில்,மின்விளக்குகள் போடப்படாததை கண்டேன்.மக்களின் கருத்துக்களை கேட்கும்போது கவலையாக உள்ளது.

கடந்த கால அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்று மக்களை ஏமாற்றியுள்ளனர்.தற்போது அவர்களுக்கு மக்கள் முன் செல்லமுடியாதுள்ளது.

பேரினவாத கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி தமது வாக்குகளை மாத்திரமே நிரப்பியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க