சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியின் ஒளி விழா நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் காலை 9.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் இந் நிகழ்வுகள் ஆரம்பமானது.

முன்பள்ளி சிறார்களின் நடனம், பேச்சு, பாடல், போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை, கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை உப அதிபர், கடற்றொழிலாளர் சங்க தலைவர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.