செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநரருமான செந்தில் தொண்டமானுக்கு புலம்பெயர் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை எடுத்துரைத்து அயலக தமிழர் மாநாடு வெற்றியடைய வழங்கிய ஒத்துழைப்புக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்று நிகழ்வை கௌரவப்படுத்தியமை மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக அரசு தெரித்துள்ளார்.