சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

-யாழ் நிருபர்-

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் நேற்றையதினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.

மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது – 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்திய போதே மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று வியாழக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்