சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-

சுனாமி அனர்த்தத்தினால் மூதூரில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை மூதூர் – தக்வாநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மூதூர் ஈராக் விளையாட்டுக் கழகத்தினால் இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு குறித்த கழகத்தின் தலைவர் உமர் ஜவாத் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது விசேட துவா பிரார்த்தனையும் இடம் பெற்றது. சுனாமி அனர்த்தத்தில் மூதூரில் மாத்திரம் 286 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்