சுஜீவ சேனசிங்கவின் சொகுசு கார் பிணையில் விடுவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சொகுசு காரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட குறித்த சொகுசு காரை விற்பனை செய்தல், மாற்றியமைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து 100 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தொடர்புடைய வழக்கு விசாரணையின்போது, குறித்த காரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.