சி.ஐ.டி க்கு அழைக்கப்பட்டார் கருணா அம்மான்
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், 2006 டிசம்பர் 15 ஆம் திகதி,கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது, இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைக்கப்பட்டதையடுத்து, கருணா அம்மான் நேற்று புதன்கிழமை கொழும்பிற்கு சென்றதாகவும், இன்று வாக்குமூலம் வழங்கிவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பில் கருணா அம்மானிடம் தெளிவுபடுத்தலை பெற அவரை தொடர்பு கொண்ட போது, அது பலனளிக்கவில்லை.
கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத், 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது, இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார். மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது, தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும், அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் அந்த நாட்களில் கூறியிருந்ததாக, தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்