சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மரணம்

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் நேற்று சனிக்கிழமை பகல் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

நாச்சிலந் தெனிய பகுதியைச் சேர்ந்த ஹேமாவதி (வயது – 66) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

குறித்த பெண் சிவனொளிபாத மலையில் தரிசனம் செய்து பின் வீடு திரும்பிய நிலையில் ஊசி மலைக்கும் சிவப்பு அம்பலம் பகுதிக்கும் இடையில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க