சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்: இளைஞன் கைது

கிளிநொச்சியில் நேற்று திங்கட் கிழமை கஞ்சாவுடன் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரதிபுரம் பகுதியில் வீடொன்றில் கஞ்சா இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய திடீர் சோதனையை மேற்கொண்ட மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோவும் 700 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சாவை வேறு இடம் கொண்டு செல்வதற்காக முற்பட்ட இளைஞனையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட தடயப்பொருள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.