Last updated on May 27th, 2024 at 12:58 pm

சிரேஷ்ட சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

சிரேஷ்ட சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

ஜனாதிபதியின் சிரேஷ்ட சட்டத்தரணி காமினி மாரப்பன சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று சனிக்கிழமை காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

காமினி மாரப்பன முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் சகோதரர் ஆவார்.

சட்டத்தரணி காமினி மாரப்பன பல சர்ச்சைக்குரிய வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணியாகக் கருதப்படுகிறார்.

2021ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக அவரை நியமித்தார்.

மறைந்த காமினி மாரப்பனவின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க