சிங்கப்பூரில் ‘தமிழ்மொழி’ திருவிழா

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. பாடசாலைகளில் தாய்மொழிப் பாடம் என இந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நாடாளுமன்றிலும் பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டு நாணயத் தாள்களிலும் இந்த நான்கு மொழிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில்  சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை கொண்டாடவும், ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கவும், மொழியை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒரு மாத தமிழ் மொழி திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஒரு மாத காலமும், தமிழின் தொன்மையை பறைசாற்றும் நாடகங்கள், இசை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், இணையவழி ஊடாக  வாயிலாக நடத்தப்படுகின்றன