சாக்லெட் தினத்தில் எந்த வகையான சாக்லெட்டை பரிசாக கொடுக்கலாம்..?

பூக்கள், பரிசுகளைத் தவிர, சாக்லெட்டுகளை உங்களின் ஆருயிர் காதலிக்கு பரிசளிப்பதன் மூலம் இனிமையாக கொண்டாடலாம். சாக்லெட்டுகள் உண்மையில் காதல் உணர்வை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டவை. மேலும் இது ஒற்றுமை, உற்சாகம், சந்தோஷங்கள் மற்றும் வாழ்க்கையின் சிறிய இன்பங்களில் கூட இதை பகிர்ந்து கொள்ளலாம்.

சாக்லெட்டுகளின் பிரபலம் வட அமெரிக்காவின் ஆஸ்டெக் பழங்குடியினரின் காலத்திற்கு முந்தையது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சாக்லெட்டுகளை மிக உயர்ந்த பாலுணர்வாகக் கருதினார்கள். மேலும், இந்த தினம் ஒரு கிறிஸ்தவ விருந்து நாளாக உருவெடுத்ததாகக் கூறப்படுகிறது, இது ரோமில் தியாகியாக இருந்த செயிண்ட் வாலண்டைனின் நினைவாக வழங்கப்பட்டது.

இதய வடிவிலான சாக்லெட் பெட்டிகளைக் கண்டுபிடித்தவர் ‘கேட்பரி’. சாக்லேட்களை இதுபோன்ற வடிவங்களிலும் செய்யலாம் என்று உலகிற்கு காண்பித்த பின்னர் காதலர் தின கொண்டாட்டம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறப்பான ஒன்றை அளிக்க பின்வரும் விருப்பங்களைத் நீங்கள் தேர்வுசெய்யலாம்:

* சாக்லெட் பூங்கொத்துகள்
* வெரைட்டி சாக்லெட்டுகள்
* சாக்லெட் ஹாம்பெர்களுடன் சாக்லெட் கேண்டிகள்
* சுவையான சாக்லெட் கேக்
* சாக்லெட் ஓவியங்கள்
* ஒரு வாளி முழுக்க சாக்லேட் பரிசு
* சாக்லெட் மசாஜ்
* சாக்லெட்டில் உணவு செய்து கொடுப்பது போன்றவற்றை கொடுத்து அசத்தலாம்.

சாக்லெட்டுகள் மக்களை மகிழ்விக்கின்றன. மேலும் சாக்லெட்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரமாகும். அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, மகிழ்ச்சியான ஹார்மோன்களை உருவாக்குகின்றன. மேலும் உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை இந்த சாக்லேட்டுகள் செய்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, சாக்லெட்டுகள் ஒரு உறவின் நல்ல துவக்கம். நீங்கள் யாருடனாவது சண்டை போட்டுவிட்டால் கவலை வேண்டாம் அவர்களுக்கு ஒரு சாக்லெட்டை வாங்கு கொடுங்கள் போதும்.

சாக்லெட்டுகள் பலரின் மனநிலையை மேம்படுத்துகின்றன, உங்கள் அன்பின் விலைமதிப்பற்ற உணர்வுகளை தனித்துவமான மற்றும் அழகான முறையில் வெளிப்படுத்த இவை உதவுகின்றன.

சாக்லெட் தினத்தின் சிறந்த பகுதி என்னவென்றால், இந்த தினத்தை உங்கள் காதலனோ அல்லது காதலியுடன் மட்டுமே கொண்டாடப்பட வேண்டியதில்லை, சாக்லெட் தினத்தை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களுடனும் கொண்டாடலாம்.