சந்நிதியான் ஆச்சிரமத்தால் 280,000 பெறுமதியான வெள்ள நிவாரண உதவிகள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு – நெடுங்கேணி, கரடிப்பிலவு ஆகிய கிராமங்களில் செய்யப்பட்ட 56 குடும்பங்களுக்கு ரூபா 280,000 பெறுமதியான அத்தியவசியமான உலருணவு பொருட்கள் கரடிப்பிலவு முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.
அறநெறிப் பாடசாலையின் இணைப்பளர் த.ஜீவா தலைமையில் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றன.
இவ் உதவி வழங்கும் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்